ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
பிரபல கன்னட நடிகை குட்டி ராதிகா. தமிழில் இயற்கை, மீசை மாதவன், வர்ணஜாலம் உட்பட சில படங்களில் நடித்துள்ளார். இவர் இப்போது நடிக்கும் கன்னட படம், 'பைரா தேவி'. ரமேஷ் அரவிந்த் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். ரங்கையனா ரகு, ரவிசங்கர், ஸ்கந்தா அசோக், அனு முகர்ஜி, மாளவிகா அவினாஷ், சுசீந்திரா பிரசாத் உட்பட பலர் நடித்துள்ளனர்.
ஸ்ரீ ஜெய் கதை , திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் இந்தப் படத்துக்கு ஜே.எஸ்.வாலி ஒளிப்பதிவு செய்கிறார். கே.கே.செந்தில் பிரசாத் இசை அமைக்கிறார். வாரணாசி, காசி, ஹரித்வார், ஐதராபாத், சென்னை மற்றும் பெங்களூரு பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி புரடக்ஷன் தயாரிக்கிறது.
இந்த படத்தில் ராதிகா குமாரசாமி அகோரியாக நடிக்கிறர். ராதிகாவின் பிறந்தநாளையொட்டி படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ராதிகா அகோரி வேடத்தில் மிரட்டலாக காணப்படுகிறார். படத்தை தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளிலும் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள். ராதிகா கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமியை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.