கதையின் நாயகனாக சமுத்திரக்கனிக்கு அடுத்தடுத்து ரிலீஸ் | ரஜினியின் பிறந்தநாளில் 'டபுள்' அப்டேட்? | மாரி தொடரிலிருந்து வெளியேறுகிறாரா ஹீரோயின் ஆஷிகா படுகோன் | சைலண்டாக நிச்சயதார்த்தத்தை முடித்த தனுஷிக் | சீதாவின் தங்கையா இந்த வில்லி நடிகை | மீடியாவுக்கு குட்பை சொன்ன சுந்தரி நடிகை | அஜித் படத்தில் இருந்து வெளியேறியது ஏன்? - மனம் திறந்த விக்னேஷ் சிவன் | மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து வாழ்த்து பெற்ற அமரன் படக்குழுவினர் | எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் - ராஷி கண்ணா | சூர்யா 45 படத்தில் ‛லப்பர் பந்து' நடிகை |
உலக புகழ்பெற்ற ஆஸ்கர் விருது அமைப்பின் துணை அமைப்பான அகாடமி ஆப் மோஷன் பிக்சர்ஸ் அண்ட் ஆர்ட்ஸ் என்ற அமைப்பு, தனது புதிய உறுப்பினர் குழுவில் ராம் சரணின் பெயரை இடம்பெறச் செய்துள்ளது. ஆஸ்கர் விருதுக்கான படங்களை தேர்வு செய்வதில் இந்த அமைப்பு முக்கிய பங்காற்றுகிறது. இதில் உலகம் முழுக்க உள்ள நடிகர்கள், இயக்குனர் உள்ளிட்ட திரையுலகினர் உறுப்பினர்களாக உள்ளனர். தற்போது ராம் சரணை இந்த அமைப்பு உறுப்பினராக்கி உள்ளது.
இதுகுறித்து அகாடமி ஆப் மோஷன் பிக்சர்ஸ் அண்ட் ஆர்ட்ஸ் அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் “கலைத்துறையில் சேவை செய்யும் நடிகர்களை கவுரவப்படுத்தி வரும் நிலையில், ராம் சரணும் அதில் ஒரு அங்கமாகி இருப்பது மகிழ்ச்சி தருகிறது” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஜூனியர் என்டிஆர் இந்த அமைப்பின் உறுப்பினர் ஆனார்.
ராம்சரண், ஜூனியர் என்டிஆர் இருவருமே 'ஆர்ஆர்ஆர்' படத்தில் நடித்த பிறகு உலக புகழ் பெற்றார்கள். ஜூனியர் என்டிஆர் தற்போது 'தேவரா' படத்தில் நடித்து வருகிறார். ராம்சரண் ஷங்கர் இயக்கத்தில் 'கேம் சேஞ்சர்' படத்தில் நடிக்கிறார்.