ஓங்கி குத்த வேண்டும் : விஜய் பேச்சால் நடிகர் ரஞ்சித் ஆவேசம் | ரூ. 300 கோடி வசூல் சாதனை படைத்த மகாவதார் நரசிம்மா | அறிவழகன் இயக்கத்தில் அதிதி ஷங்கர் | மிஷ்கின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் | நடிகர்களுக்கு எதிராக செய்யப்படும் 'பெய்டு விமர்சனம்' : தமிழ் சினிமாவில் புதிய சர்ச்சை...! | போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் | விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் | ‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார் |
சென்னையில் ஏ.ஆர்.ரஹ்மானின் மறக்கமா நெஞ்சம் என்ற இசை நிகழ்ச்சி நடைபெற்ற போது டிக்கெட் விற்பனையில் நடந்த குளறுபடிகள் காரணமாக, ஏகப்பட்ட குழப்பம், சர்ச்சைகள் நடந்தேறின. குறிப்பாக அந்த நிகழ்ச்சி நடைபெற்ற அன்று சாலையில் மிகப்பெரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் முதலமைச்சரின் வாகனங்கள் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இப்படியான நிலையில் இன்று மாலை சென்னையில் உள்ள நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் ஹாரிஸ் ஜெயராஜின் ராக் ஆன் ஹாரிஸ் என்ற இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. ரஹ்மான் இசை நிகழ்ச்சியை போன்று இந்த இசை நிகழ்ச்சியில் குளறுபடி ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக காவல்துறை பல்வேறு நிபந்தனைகளை விதித்து இருக்கிறது. அதன்படி எத்தனை டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. டிக்கெட் ஒவ்வொன்றும் எவ்வளவு ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது உள்ளிட்ட தகவல்களை காவல்துறைக்கு அளிக்க வேண்டும். குறிப்பாக வாகனங்கள் நிறுத்துவதற்கு சரியான பார்க்கிங் வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடக்கூடாது என்று அந்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்களுக்கு காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.