லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
இயக்குனர் செல்வராகவன் தமிழில் காதல் கொண்டேன், புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் போன்ற தரமான படங்களை ரசிகர்களுக்கு தந்துள்ளார். சமீபகாலமாக அவர் இயக்கத்தில் வெளிவந்த நெஞ்சம் மறப்பதில்லை, என்.ஜி.கே, நானே வருவேன் ஆகிய படங்கள் ரசிகர்களை திருப்திப்படுத்த வில்லை.
சில ஆண்டுகளாக செல்வராகவன் தமிழ் படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார். இப்போது தமிழை தொடர்ந்து தெலுங்கு படத்தில் முதல் முறையாக நடிக்கவுள்ளார். இயக்குனர் கோபிசந்த் மாலினேனி, நடிகர் ரவி தேஜா கூட்டணியில் நான்காவது முறையாக உருவாகும் படத்தில் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இணைந்துள்ளார் என அறிவித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு எஸ். எஸ். தமன் இசையமைக்கிறார்.