நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர். தற்போது தனது 50வது படத்தை இயக்கி நடித்து வருகிறார். அதே சமயத்தில் 'கேப்டன் மில்லர்' படத்தின் டப்பிங் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். ராக்கி பட இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார்.
இத்திரைப்படம் டிசம்பர் 15ம் தேதி அன்று தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது. ஆனால், கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்த டீசர் தவிர வேற எந்த அப்டேட் படக்குழுவினர்கள் தரப்பில் தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில் தனுஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் "கேப்டன் மில்லர் பாடல்களை கேட்க சற்று பொறுமையாக காத்திருங்கள்" என புதிய போட்டோ உடன் பகிர்ந்துள்ளார்.