பாலிவுட் நடிகருக்கு ஜோடியாகும் மீனாட்சி சவுத்ரி | நடிகர் சிவகுமாருக்கு கவுரவ டாக்டர் பட்டம் | 'அவதார் ' பார்க்க 10 லட்சம் இந்தியர்கள் ஆர்வம் | பிளாஷ்பேக் : ரீமேக்கில் வெள்ளி விழா கொண்டாடிய படம் | பிளாஷ்பேக் : ரீமேக்கில் தோல்வியடைந்த முதல் படம் | திடீர் நடிகையான தயாரிப்பாளர் | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ஸ்மிருதி வெங்கட் படம் | சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தமிழ் படம் | ‛டியூட்'-ல் இடம் பெற்ற ‛கருத்த மச்சானை' நீக்க நீதிமன்றம் உத்தரவு | புயல் மிரட்டும் வேளையிலும் இந்த வாரம் 12 படங்கள் ரிலீஸ் |

நடிகை நயன்தாராவின் 75வது படத்தை ஜீ ஸ்டூடியோஸ், டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர். இந்த படத்தை ஷங்கரின் உதவி இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்குகிறார். ராஜா ராணி படத்திற்கு பிறகு இந்தப் படத்தில் நடிகை நயன்தாரா உடன் நடிகர்கள் ஜெய் மற்றும் சத்யராஜ் இணைந்து நடிக்கின்றனர். கே.எஸ்.ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி, கார்த்திக் குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு 'அன்னபூரணி' என தலைப்பு வைத்துள்ளதாக வீடியோவின் மூலம் அறிவித்துள்ளனர். இதில் நயன்தாரா உணவுப் பிரியையாக நடித்திருக்கிறார் என தெரிகிறது. மேலும் படத்தின் டேக் லைனா ‛அன்னப்பூரணி - சாப்பாட்டு பிரியை' என குறிப்பிட்டுள்ளனர். இதனால் இப்படம் உணவு மற்றும் சமையலை மையமாக கொண்ட கதையில் உருவாகலாம் என தெரிகிறது. அதேசமயம் படத்தில் காட்டும் வீடியோவால் சர்ச்சைகளும் எழலாம்.