பிரேம் குமார் இயக்கத்தில் விக்ரம்? | ஷாருக்கானை வைத்து அலைபாயுதே திட்டம்! - மணிரத்னம் | தெலுங்குத் திரையுலகினர் மீது பவன் கல்யாண் கோபம் | கலாம் கதையை படமாக்குவது சவால்: இயக்குனர் ஓம் ராவத் | அரசியல் சீன், டயலாக் உருவாக்கி கொடுத்த நடிகர் | ரோஜாஸ்ரீயின் அழகு ரகசியம் | ‛‛கமல் ஒரு ஏணி; அவரை மதித்து மேலே செல்வேன், மிதித்து அல்ல'': சிம்பு | 'கேம் சேஞ்ஜர்' அனுபவம் ஒரு 'பயங்கரம்' - விலகிய எடிட்டர் பேச்சு | பிளாஷ்பேக்: மலைக்க வைக்கும் 50வது ஆண்டில் “மயங்குகிறாள் ஒரு மாது” | ஜூன் மாதத்தில் ‛சர்தார் 2' படப்பிடிப்பு முடியும் ; மாளவிகா மோகனன் |
80, 90களில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ரசிகர்களுக்கு இடையேதான் கடும் போட்டி. அது இப்போதும் 'விக்ரம், ஜெயிலர்' வசூல் ஆகியவற்றின் மூலமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
80, 90களில் ரஜினி, கமல்ஹாசன் படங்கள் ஒரே நாளில் வெளியானால் அப்போது நடக்கும் சண்டைகள் மிக அதிகமாக இருக்கும். அந்தக் காலத்தில் சமூக வலைத்தளங்கள் இருந்திருந்தால் சந்தி சிரித்திருக்கும். அப்படி அடித்துக் கொள்வார்கள்.
ரஜினிகாந்த் தான் எப்போதுமே வசூலில் கமல்ஹாசனை மிஞ்சுவார் என்பது அந்தக் காலத்தில் எழுதப்படாத ஒரு சட்டம். ஆனால், ரஜினி படத்தையே தோல்வியடைய வைத்து வசூலில் மட்டுமல்லாது மக்கள் மனதிலும் இடம் பிடித்த சம்பவம் 1992ம் ஆண்டு நடந்தது.
அந்த ஆண்டில் தீபாவளி அக்டோபர் 25ம் தேதி வந்தது. அன்றைய தினத்தில் விஜயகாந்த் நடித்த 'காவியத் தலைவன்', ரஜினிகாந்த் நடித்த 'பாண்டியன்', பாக்யராஜ் நடித்த 'ராசுக்குட்டி', பிரபு நடித்த 'செந்தமிழ்ப் பாட்டு', கமல்ஹாசன் நடித்த 'தேவர் மகன்', சத்யராஜ் நடித்த 'திருமதி பழனிச்சாமி' உள்ளிட்ட படங்கள் வெளிவந்தன. இவற்றில் 'காவியத் தலைவன், செந்தமிழ்ப் பாட்டு' மிகச் சுமாராகவே ஓடியது. 'திருமதி பழனிச்சாமி, ராசுக்குட்டி' வெற்றிப் படங்களாக அமைந்தன. 'பாண்டியன்' படம் படுதோல்வியை சந்தித்தது. ஆனால், 'தேவர் மகன்' அனைத்து தரப்பினரின் வரவேற்பைப் பெற்று பெரிய வெற்றிப் படமாகியது.
இன்று வரை 'தேவர் மகன்' படம் தமிழ் சினிமாவின் கிளாசிக் படங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. மலையாள இயக்குனர் பரதன் இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில், கமல்ஹாசன், சிவாஜி கணேசன், கவுதமி, தேவதி, நாசர், வடிவேலு மற்றும் பலர் நடித்திருந்தனர். இன்றுடன் அப்படம் வெளியாகி 31 ஆண்டுகள் ஆகிறது.
இன்றைய நாளில் இதற்கு முன்பு வெளிவந்த படங்களாக 1954ல் 'ரத்தக் கண்ணீர்', 1973ல் 'பூக்காரி, பாக்தாத் பேரழகி, கௌரவம்', ஆகிய படங்களையும் 2008ல் அஜித் நடித்து வெளிவந்த 'ஏகன்', 2019ல் வெளிவந்த 'பிகில், கைதி' ஆகிய படங்களை குறிப்பிட்டுச் சொல்லலாம்.