வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! | சூர்யா 44வது படத்தின் டைட்டில் 'கல்ட்' | உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார் | வைரலாகும் சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்படங்கள் | மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் | ‛96' படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது உறுதி |
முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியானால் அவற்றின் வசூலை தயாரிப்பு நிறுவனங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்து வருகின்றன. அந்த விதத்தில் விஜய் நடித்து வெளியான 'லியோ' படத்தின் முதல் நாள் வசூல் 148.5 கோடி என தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. அது மட்டுமல்லாது உலகம் முழுவதுமான வசூல் விவரங்களையும் வெளியிட்டது.
முதல் நாள் வசூல் வெளியானது போல இரண்டாம் நாள் வசூலும் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால், அப்படி எந்தவிதமான அறிவிப்பும் வெளியாகவில்லை. இது குறித்து விசாரித்த போது முதல் நாள் வசூலை விட இரண்டாம் நாள் வசூல் கொஞ்சம் குறைவாக இருந்தது. அதே சமயம் மூன்றாம் நாள் வசூல் முதல் நாள் வசூலை விட அதிகமாக இருந்தது.
எனவே, மூன்று நாள் வசூலையும் சேர்த்து அறிவிக்கலாம். அல்லது தமிழகத்தில் மட்டும் மூன்று நாட்களில் 100 கோடி வசூல், உலக அளவில் 200 கோடி வசூல் என இன்று அறிவிக்க வாய்ப்புள்ளதாகச் சொல்கிறார்கள். வசூல் விவரங்களை அறிவிக்க ஆரம்பித்தால் 'ஜவான்' படத் தயாரிப்பு நிறுவனம் போல தினமும் அறிவிக்க வேண்டும். அதுதான் முறையானது என ரசிகர்கள் தெரிவிக்கிறார்கள்.