மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
தமிழ்த் திரையுலகில் 80களில் கொடி கட்டிப் பறந்த முன்னணி நடிகைகளில் ஒருவர் ராதா. 'அலைகள் ஓய்வதில்லை' படத்தில் அறிமுகமாகி பல முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தவர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் பல வெற்றிகளைக் கொடுத்துள்ளார். திருமணத்திற்குப் பின் நடிப்பதை விட்டுவிட்டு மும்பையில் செட்டிலாகிவிட்டார்.
அவருக்கு கார்த்திகா, துளசி என இரு மகள்களும், விக்னேஷ் என்ற ஒரு மகனும் இருக்கிறார். கார்த்திகா 2011ல் வெளிவந்த 'கோ' படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். அதன்பின் 'அன்னக்கொடி, புறம்போக்கு என்கிற பொதுவுடமை' படத்திலும் நடித்தார். முதல் படம் பெரிய வெற்றியைப் பெற்ற பின்னும் அடுத்த படங்கள் ஓடாததால் அவரால் இங்கு ஜொலிக்க முடியவில்லை. மணிரத்னம் இயக்கிய 'கடல்' படத்தில் இரண்டாவது மகள் துளசி அறிமுகமானார். அவரும் அதன்பின் 'யான்' என்ற படத்தில் நடித்ததோடு சரி.
கார்த்திகா அவருடைய இன்ஸ்டாகிராம் தளத்தில் ஒரு இளைஞருடன் நெருக்கமாக இருக்கும் ஒரு புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் கையில் அணிந்திருக்கும் மோதிரம்தான் 'போகஸ்' செய்யப்பட்டுள்ளது. அவருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது குறித்து பதிவிட்டுள்ளார் எனத் தெரிகிறது. விரைவில் அவருடைய திருமண அறிவிப்பு வரலாம்.