மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து வாழ்த்து பெற்ற அமரன் படக்குழுவினர் | எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் - ராஷி கண்ணா | சூர்யா 45 படத்தில் ‛லப்பர் பந்து' நடிகை | சிவராஜ் குமாருக்கு பதிலாக விஷால் | விஜய் மகன் இயக்கும் படத்தில் சந்தீப் கிஷன் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | 27 ஆண்டுகளுக்கு முந்தைய ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா விடாமுயற்சி? | 20வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய அனிகா சுரேந்திரன் | தந்தை மறைவு : சமந்தா உருக்கமான பதிவு | கர்மா உங்களை விடாது : நயன்தாரா பதிவு யாருக்கு? | திரிஷா நடித்துள்ள மலையாள படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், விஜய், திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன் மற்றும் பலர் நடிப்பில் இன்று வெளியான படம் 'லியோ'. இப்படத்தின் முதல் சிங்கிள் வெளியானதிலிருந்து நேற்று வரையிலும் தொடர்ந்து ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கி வந்தது. அதுவே படத்திற்கு இலவசமாகவும் பெரிய விளம்பரத்தைத் தேடிக் கொடுத்தது.
படக்குழுவில் லோகேஷ் கனகராஜ் தவிர வேறு யாரும் இந்தப் படத்தின் புரமோஷனுக்காக பெரிய அளவில் அக்கறை செலுத்தவில்லை. விஜய் படம் என்பதாலேயே இந்தப் படத்திற்கு எப்படியும் ரசிகர்கள் வந்து விடுவார்கள் என்ற அதீத நம்பிக்கையில் இருந்தார்கள். படம் வெளியான பின் இருவேறு விதமான விமர்சனங்கள் எழுந்துள்ளது.
லோகேஷ் கனகராஜின் முந்தைய படங்களைப் போல திறமையான திரைக்கதை இந்தப் படத்தில் இல்லை என்று சிலர் விமர்சிக்கிறார்கள். அதே சமயம் விஜய் படம் முழுவதையும் தாங்கிப்பிடித்து விடுகிறார் என்றும் அவரது ரசிகர்கள் கூறி வருகிறார்கள். படம் வெளியானதுமே விதவிதமான மீம்ஸ்களும் வர ஆரம்பித்துவிட்டது.
'ஜெயிலர்' படம் வந்த போது ரஜினிகாந்தை விஜய் ரசிகர்கள் நேரிடையாகவே விமர்சித்தார்கள். ஆனாலும், படம் வசூல் அள்ளியது. இந்நிலையில் இந்தப் படத்திற்காக விஜய்யையும், லோகேஷயும் ரஜினி ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள்.
விஜய்யை வைத்து 'பீஸ்ட்' படம் கொடுத்த நெல்சனை ரஜினிகாந்த் 'ஜெயிலர்' படம் மூலம் காப்பாற்றினார். அது போல விஜய்யை வைத்து 'லியோ' படத்தைக் கொடுத்துள்ள லோகேஷை ரஜினிகாந்த் அவரது 171வது படம் மூலம் காப்பாற்றுவார் என்றும் வெறுப்பேற்றி வருகிறார்கள்.
'லியோ' சர்ச்சை ஓய்ந்தாலும் ரஜினி, விஜய் ரசிகர்கள் சண்டை அடுத்த சில நாட்களுக்கு ஓயாது என்றே தெரிகிறது.