போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், திரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத் உள்ளிட்டோர் நடித்துள்ள ‛லியோ' படம் இன்று திரைக்கு வந்துள்ளது. தமிழகத்தில் 9மணிக்கு காட்சி இதன் முதல்காட்சி துவங்கியது. இந்தபடத்தின் முதல்காட்சி முடியும் முன்பே பைரசி தளங்களில் லியோ படம் வெளியாகி உள்ளது. இது படக்குழுவினரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. தமிழகம் தவிர்த்து பிறமாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் ஏறக்குறைய இந்த படத்தின் ஓரிரு காட்சிகள் முடிவடைந்துவிட்டன. இதனால் அங்கிருந்து இந்த படம் பைரசி தளங்களில் வெளியாகி இருக்கலாம் என கூறப்படுகிறது.
முன்னதாக இந்த படத்தை தயாரித்துள்ள 7 ஸ்கிரீன் லலித், சென்னை ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்து இருந்தார். அதில், லியோ படம் பல கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளது. இதை திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியானால் பெருத்த நஷ்டம் ஏற்படும் என்று கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, ‛‛மனுதாரர் பட்டியலிட்டுள்ள 1,246 இணையதளங்களில் லியோ திரைப்படத்தை சட்டவிரோதமாக வெளியிட தடை விதிக்கப்படுகிறது. இந்த இணையதளங்களில் லியோ படம் வெளியாவதை தடுக்க பி.எஸ்.என்.எல் உள்ளிட்ட இணையதள சேவை நிறுவனங்கள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.
இந்தச்சூழலில் படம் திருட்டுத்தனமாக வெளியாகி படக்குழுவினரை மட்டுமல்லாது ரசிகர்களையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இதுதொடர்பான ஸ்கிரீன் ஷாட்களை ரசிகர்கள் சமூகவலைதளத்தில் பகிர்ந்து வருகின்றனர். மேலும் இதை பகிர வேண்டாம் என படக்குழுவினர் தரப்பிலும், ரசிகர்கள் தரப்பிலும் வேண்டுகோள் வைக்கப்பட்டு வருகுிறது.