மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
‛மாஸ்டர்' படத்தின் வெற்றிக்கு பின் நடிகர் விஜய், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இன்று(அக்., 19) உலகமெங்கும் திரைக்கு வந்துள்ள படம் ‛லியோ'. திரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், கவுதம் மேனன், மிஷ்கின், சாண்டி மாஸ்டர், பிரியா ஆனந்த் உள்ளிட்ட ஏகப்பட்ட திரைநட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
தமிழகத்தில் இந்த படம் காலை 9 மணிக்கு தான் வெளியாகி உள்ளது. அதேசமயம் மற்ற மாநிலங்களில் இந்தபடம் அதிகாலையிலேயே வெளியாகிவிட்டது. இதனால் மற்ற மாநில ரசிகர்கள் மட்டுமின்றி தமிழகத்தை சேர்ந்த பல ரசிகர்களும் இந்த படத்தை அங்கு சென்று பார்த்துள்ளனர். இதனால் படம் பற்றிய ரிசல்ட் வர துவங்கி உள்ளது.
படம் எப்படி இருக்கு.?
படத்தின் முதல்பாதி சூப்பராக இருப்பதாகவும், இரண்டாம் பாதி சுமார் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அதேசமயம் படம் விறுவிறுப்பாக நகர்கிறது. நிச்சயம் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடிக்கும். ரசிகர்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும் என கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும் லோகேஷின் முந்தைய படங்களை ஒப்பிடும்போது மாஸ்டருக்கு சற்று கூடுதலாகவும், விக்ரமிற்கு கீழாகவும் இந்த படம் இருப்பதாக ரசிகர்கள் கூறி உள்ளனர். மேலும் இந்தபடம் படத்தின் கிளைமாக்ஸில் எல்சியுவை லோகேஷ் சேர்த்துள்ளாராம். அதேசமயம் இதுவரை பார்த்திராத ஒரு விஜய்யை இந்த படத்தில் பார்க்கலாம் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.