வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! | சூர்யா 44வது படத்தின் டைட்டில் 'கல்ட்' | உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார் | வைரலாகும் சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்படங்கள் | மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் | ‛96' படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது உறுதி |
சென்னையில் பெரிய ஹீரோக்களின் படங்கள் வெளியாகிறது என்றாலே அதில் நடிப்பவர்கள் சிறப்புக் காட்சியாக படங்களைப் பார்க்கத் தேர்வு செய்யும் தியேட்டர் ரோகிணி தியேட்டர். தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்கத்தின் பொதுச் செயலாளரான ரோகிணி பன்னீர்செல்வம் அத்தியேட்டரின் உரிமையாளர்.
விஜய் நடித்துள்ள 'லியோ' படத்தின் டிரைலரை அங்கு திரையிட்டார்கள். ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஒரே நேரத்தில் முண்டியடித்துச் சென்றதால் அத் தியேட்டரின் இருக்கைகள் அனைத்தும் நாசமடைந்தன. அதனால், சுமார் பத்து லட்ச ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டதாகச் செய்திகள் வந்தன. படத்தைத் திரையிடும் போது அதை சம்பாதித்து விடலாம் என அவர்கள் நினைத்திருப்பார்கள்.
ஆனால், இப்போது 'லியோ' படத்தை அங்கு திரையிடப் போவதில்லை என நிர்வாகத்தினர் அறிவித்துள்ளார்கள். அதனால், விஜய் ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இருக்கைகள் நாசமானாலும் பரவாயில்லை, ரசிகர்கள்தான் முக்கியம் என நினைத்த தியேட்டருக்கு படத்தைக் கொடுக்காமல் வினியோகஸ்தர் செயல்படுவது நியாயமல்ல என ரசிகர்கள் நினைக்கிறார்கள்.
80 சதவீதம், 20 சதவீதம் என்ற அடிப்படையில் 'லியோ' படத்தின் வினியோகத்தை டிஸ்ட்ரிபியூஷன் முறையில் செய்வதால் இந்த சிக்கல் எனத் தெரிவிக்கிறார்கள். ரோகிணி தியேட்டர் போலவே, சென்னை, குரோம்பேட்டை, வெற்றி தியேட்டரிலும் படத்தைத் திரையிடவில்லை என அறிவித்துள்ளார்கள்.
சென்னையில் உள்ள எஜிஎஸ் நிறுவனத்தினர் நேற்று இப்படித்தான் அறிவித்தார்கள். பின்னர் படத்தைத் திரையிடுகிறோம், ஒப்பந்தம் செய்துவிட்டோம் என நேற்று இரவு அறிவித்தார்கள். முன்பதிவும் சிறப்பாக நடந்து வருகிறது. அது போல, ரோகிணி, வெற்றி தியேட்டர்களுக்கும் நடக்குமா என்பது விரைவில் தெரிய வரும். இருப்பினும் அது சந்தேகம்தான், இன்னும் 24 மணி நேரம் கூட இல்லை என்றும் கூறுகிறார்கள்.