கதையின் நாயகனாக சமுத்திரக்கனிக்கு அடுத்தடுத்து ரிலீஸ் | ரஜினியின் பிறந்தநாளில் 'டபுள்' அப்டேட்? | மாரி தொடரிலிருந்து வெளியேறுகிறாரா ஹீரோயின் ஆஷிகா படுகோன் | சைலண்டாக நிச்சயதார்த்தத்தை முடித்த தனுஷிக் | சீதாவின் தங்கையா இந்த வில்லி நடிகை | மீடியாவுக்கு குட்பை சொன்ன சுந்தரி நடிகை | அஜித் படத்தில் இருந்து வெளியேறியது ஏன்? - மனம் திறந்த விக்னேஷ் சிவன் | மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து வாழ்த்து பெற்ற அமரன் படக்குழுவினர் | எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் - ராஷி கண்ணா | சூர்யா 45 படத்தில் ‛லப்பர் பந்து' நடிகை |
மருதம் நாட்டுப்புற நிறுவனம் சார்பில் எஸ்.ஜெகநாதன் தயாரித்திருக்கும் படம் 'டப்பாங்குத்து'. இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை எஸ்.டி.குணசேகரன் எழுத, ஆர்.முத்துவீரா இயக்கியிருக்கிறார். சங்கரபாண்டி கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடிகளாக தீப்தி, துர்கா என இரண்டு நடிகைகள் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் தெருக்கூத்து கலைஞர்களும் நடித்துள்ளனர். ராஜா கே.பக்தவச்சலம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சரவணன் இசையமைத்திருக்கிறார்.
படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் இயக்குனர் முத்துவீரா பேசும்போது ''தமிழின் தொன்மையான இசை வடிவங்களான தெம்மாங்கு, தாலாட்டு, ஒப்பாரி, வில்லுப்பாட்டு, கும்மி, நலுங்கு, நடவு என பல வகை உண்டு. இதிலிருந்து 15 பாடல்களை தேர்வு செய்து அதனை இந்த திரைப்படத்தில் பயன்படுத்தி இருக்கிறோம் என்றார். பஞ்சாபை சேர்ந்த தீப்திதான் கதையின் நாயகி. அவருக்கு நாட்டுப்புற கலை பயிற்சி கொடுத்து, டப்பாங்குத்து ஆட்ட பயிற்சி கொடுத்து ஆட வைத்து படமாக்கி உள்ளோம். அவர் ஏற்கெனவே நடன கலைஞர் என்பதால் எளிதாக பயிற்சி எடுத்துக் கொண்டு நடித்தார்” என்றார்.