'டியூட்' மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள குழு | திருமணமா.. அப்படியே ஹனிமூனையும் சொல்லிடுங்க..!: திரிஷா கிண்டல் | புதுவை முதல்வருடன் தயாரிப்பாளர்கள் சந்திப்பு | போலி சாமியாராக நட்டி | ரஜினி பெயரில் புதிய படம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்காக நடத்தப்பட்ட குதிரை பந்தயம் | பிளாஷ்பேக்: 100 தியேட்டர்களில் வெளியான முதல் படம் | ஷாருக்கான் பிறந்தநாளில் ‛கிங்' பட முதல் பார்வை | ஜனவரியில் துவங்கும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படம் | த்ரிஷாவுக்கு விரைவில் திருமணம் என பரவும் தகவல் |
கடந்த 2014ம் ஆண்டில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா நடித்து வெளிவந்த திரைப்படம் 'ஜிகிர்தண்டா'. இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது 'ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ்' என்ற பெயரில் இரண்டாம் பாகத்தை உருவாக்கி வருகிறார் கார்த்திக் சுப்பராஜ்.
இதில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே. சூர்யா இணைந்து நடிக்கின்றனர். முதல் பாகத்திற்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். சமீபத்தில் இதன் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்த படத்தின் முதல் சிங்கிள் 'மாமதுரை' என பெயரில் வருகின்ற அக்டோபர் 9ம் தேதி அன்று மதியம் 12.12 மணியளவில் வெளியாகிறது என படக்குழுவினர்கள் அறிவித்துள்ளனர். இத்திரைப்படம் இந்த வருட தீபாவளிக்கு வெளியாகிறது .