நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! | ‛கில்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோ, வில்லன் யார் தெரியுமா? | அரசியல் கதைகள பின்னனியில் தனுஷ் 54வது படம்! | ஆகஸ்ட் 8ல் 6 படங்கள் ரிலீஸ்… | 2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் | பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு |
பிரபுதேவா நடிப்பில் தயாராகி வரும் புதிய படம் 'முசாசி. அறிமுக இயக்குநர் ஷாம் ரோட்ரிக்ஸ் இயக்கத்தில் தயாராகி வரும் இந்த படத்தில் பிரபுதேவா போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கிறார். இவருடன் விடிவி கணேஷ், ஜான் விஜய், மாஸ்டர் மகேந்திரன், பினு பப்பு, நடிகை லியோனா லிஷாய், அருள்தாஸ், ஜார்ஜ் மரியான், தங்கதுரை, மகேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். விக்னேஷ் வாசு ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு லியாண்டர் லீ மார்ட்டி இசையமைக்கிறார். ஜாய் பிலிம் பாக்ஸ் என்டர்டெய்ன்மென்ட் சார்பில் ஜான் பிரிட்டோ தயாரிக்கிறார்.
படத்தின் படப்பிடிப்பு தற்போது இலங்கையில் நடைபெற்று வருகிறது. படத்தில் இடம்பெறும் ஒரு பாடல் காட்சியின் படப்பிடிப்பிற்காக பிரபுதேவா உள்ளிட்ட படக்குழுவினர் இலங்கையில் முகாமிட்டு இருக்கிறார்கள். படக்குழுவினரை கவுரவப்படுத்துவதற்காக அந்நாட்டின் பிரதமரான தினேஷ் குணவர்தன பிரத்யேக அழைத்து விடுத்தார். அவரது அழைப்பினை ஏற்ற படக் குழுவினர் அவரை நேரில் சந்தித்து வாழ்த்தும், பாராட்டும் பெற்றனர். இது தொடர்பான புகைப்படத்தை படக் குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள்.