சினிமாவில் இது தான் எதார்த்தம் : திரிப்தி டிமிரி | சோசியல் மீடியாவில் விமர்சிக்கப்படும் சாய்பல்லவியின் சீதா தேவி கதாபாத்திரம்! | விஜய் இல்லாமல் எல்சியுவை தொடர சான்ஸ் இல்லை! - லோகேஷ் கனகராஜ் | பிரசாந்த் நீல், ஜூனியர் என்டிஆர் படத்தில் இணைந்த டொவினோ தாமஸ் | பாலிவுட் நடிகர் அமீர்கான் வீட்டுக்கு போன 25 ஐபிஎஸ் அதிகாரிகள்! | வில்லன் நடிகரின் வீண் பிடிவாதத்தால் மோகன்லால் ராஜினாமா செய்தார் : மாலா பார்வதி | பாண்டிராஜ் இயக்கத்தில் அடுத்து நடிப்பது விஜய்சேதுபதியா? சூரியா? | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளரின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு | ஹிந்தியில் நேரடியாக டிவியில் ஒளிபரப்பாகும் ‛ரங்கஸ்தலம்' | மோகன்லாலை போலத்தான் கஜோலும் : பிரமிக்கும் பிரித்விராஜ் |
20 வருடங்களுக்கு முன் தான் நடித்த 'அண்ணன் தங்கச்சி' என்கிற படம் மூலம் இயக்குனராகவும் மாறிய சரண்ராஜ், தற்போது தனது மகன் தேவ் கதாநாயகனாக நடிக்கும் 'குப்பன்' என்கிற படத்தை இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படத்தில் ஆதிராம் இன்னொரு நாயகனாக நடிக்க, சுஷ்மிதா மற்றும் பிரியதர்ஷினி அருணாச்சலம் இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். நடிகர் சரண்ராஜூம் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து பிரியதர்ஷினி அருணாச்சலம் கூறியதாவது: இந்தப் படத்தில் துணிச்சலான பெண்ணாக நடிப்பதால் என்னுடைய வசன உச்சரிப்பு அதற்கேற்ற மாதிரி சற்றே வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று இயக்குனர் கூறினார். இதனால் அதற்கென்று தனி பயிற்சி பெற்று நடித்தேன். இயக்குனர் சரண்ராஜும் நானும் வார்த்தைகளால் மோதிக் கொள்ளும் காட்சிகள் நிறைய இருந்தது. அந்த காட்சிகளில் நடிக்க பயந்தேன். அவர்தான் “நான் யார் என்பதை மறந்து விட்டு என் கேரக்டரை மட்டுமே மனதில் வைத்து நடி” என்று தைரியமூட்டி நடிக்க வைத்தார்.
பெரும்பாலான படப்பிடிப்பு கடற்கரையிலேயே நடைபெற்றதால் அங்குள்ள மண்தான் மிகப்பெரிய சவாலாக இருந்தது. நான் கண்களில் லென்ஸ் அணிந்திருந்ததால் கடற்கரையில் பறக்கும் மண் காரணமாக ஒரு நாளைக்கு இரண்டு முறை லென்ஸ் மாற்றி நடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
ஏற்கெனவே டி3, கடைசி காதல் கதை. நிற்க அதற்குத் தக உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளேன். தேடிவரும் வாய்ப்புகளை எல்லாம் ஏற்றுக்கொள்ளாமல். கதாபாத்திரம் சிறிதோ அல்லது பெரிதோ எதுவானாலும் கதையின் நகர்வுக்கு அது ஒரு முக்கிய காரணமாக இருக்கும் கதாபாத்திரங்களில் நடிக்கவே விரும்புகிறேன். என்கிறார் பிரியதர்ஷினி அருணாச்சலம்.