இறந்து போனவர்களை ஏன் பாட வைக்க வேண்டும்? ஹாரிஸ் ஜெயராஜ் கேள்வி | தமிழகத்தில் மட்டும் 100 கோடி வசூலை கடந்த 'குட் பேட் அக்லி' | தமன்னா பற்றிய பகிர்வு: மீண்டும் சர்ச்சையில் ஊர்வசி ரத்தேலா | குட் பேட் அக்லி வெற்றி எதிரொலி! ஆதிக் ரவிச்சந்திரனுக்கு அஜித் கொடுத்த அட்வைஸ்!! | விஜய்யின் 'சச்சின்' படத்தின் டிரைலர் வெளியானது! ஏப்ரல் 18ல் ரீரிலீஸ்! | மகள் நந்தனாவின் 14ம் ஆண்டு நினைவு நாளில் பாடகி சித்ரா வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு! | வெளியீட்டுத் தேதிகளுடன் அடுத்தடுத்து வரிசை கட்டும் படங்கள் | டென் ஹவர்ஸ் : மீண்டும் ஒரு திருப்பத்திற்காக காத்திருக்கும் சிபிராஜ் | 'நம்பிக்கை உறுதி ஆவணத்தில்' கையெழுத்திட்ட பவன் கல்யாண் மனைவி | ஏப்., 18ல் ரெட்ரோ பட இசை வெளியீட்டு விழா |
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி டைரக்ஷனில் இன்னும் பெயரிடப்படாத படம் உருவாகி வருகிறது. கமல்ஹாசன் தயாரிக்கும் இந்த படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடித்து வருகிறார். இதில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. சமீபத்தில் காஷ்மீர் பகுதியில் இந்த படத்தின் மிக முக்கியமான காட்சிகளை படம் பிடித்து திரும்பியுள்ளனர் படக்குழுவினர்.
இந்த படத்தில் காஷ்மீர் பகுதியில் படமாக்கப்பட்ட காட்சிகளுக்காக சிவகார்த்திகேயன் தனது தலை முடியை நீளமாக வளர்த்து வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ளார். அதனால் கடந்த சில மாதங்களாகவே தான் வெளியே கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் ஒரு நீளமான குல்லா ஒன்றை அணிந்து தனது ஹேர்ஸ்டைல் வெளியே தெரியாத வண்ணம் பார்த்துக் கொண்டார்.
இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் தொப்பி எதுவும் அணியாமல் தனது வழக்கமான ஹேர்ஸ்டைலுடன் காட்சியளித்தார். இனி அந்த படத்திற்கு நீளமான தலைமுடி தேவையில்லை என்பதால் வழக்கமான தோற்றத்திற்கு மாறியுள்ளார் சிவகார்த்திகேயன்.