அஜித் மகனாக நடிக்கும் வாய்ப்பை மிஸ் பண்ணினேன் ; பிரேமலு ஹீரோ வருத்தம் | அஜித்தின் 'குட் பேட் அக்லி'யால் காத்து வாங்கும் வீர தீர சூரன்! | சூர்யாவின் ரெட்ரோ சிங்கிள் பாடல் வெளியானது! | நன்றி மாமே - பிரபு, ஆதிக்குடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்துடன் திரிஷா வெளியிட்ட பதிவு! | கமலின் 237வது படம்! புதிய அப்டேட் கொடுத்த ராஜ்கமல் பிலிம்ஸ்!! | அஜித்துக்காக ஐ அம் வெயிட்டிங்! - வெங்கட் பிரபு சொன்ன தகவல் | அடுத்த நட்சத்திர காதல் கிசுகிசு - துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன் | குடும்பத்தாருடன் ஹைதராபாத் திரும்பிய பவன் கல்யாண் | விஷ்வம்பரா - 70 வயதிலும் நடனத்தில் அசத்தும் சிரஞ்சீவி | ‛‛என்னிடம் நானே மன்னிப்பு கேட்க வேண்டும்'': தவறில் இருந்து பாடம் கற்ற சமந்தா |
தமிழில் ஹரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான சிங்கம் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதனை தொடர்ந்து அந்தப்படம் ஹிந்தியில் அஜய் தேவ்கன் நடிப்பில் சிங்கம் என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு அங்கேயும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தை பிரபல இயக்குனர் ரோஹித் ஷெட்டி இயக்கி இருந்தார். அதைத்தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமாக சிங்கம் ரிட்டன்ஸ் என்கிற படத்தையும், அஜய் தேவ்கனை வைத்து இயக்கினார் ரோஹித் ஷெட்டி. ஆனால் இங்கே தமிழில் வெளியான சிங்கம் 2 படத்தின் ரீமேக்காக அல்லாமல் புதிய கதையை வைத்து அந்தப்படத்தை இயக்கினார்.
இந்த நிலையில் தற்போது மீண்டும் சிங்கம் அகெய்ன் என்கிற பெயரில் இதன் மூன்றாம் பாகத்தை இயக்குகிறார் ரோஹித் ஷெட்டி. இந்தப் படத்தின் துவக்க விழா பூஜை சமீபத்தில் நடைபெற்றது. இந்த படத்திலும் அஜய் தேவ்கனே கதாநாயகனாக நடிக்கிறார். ரோஹித் ஷெட்டியின் ஆஸ்தான நடிகரான ரன்வீர் சிங்கும் இந்த பூஜையில் கலந்து கொண்டிருப்பதை பார்க்கும்போது இவரும் இந்த படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறாரோ என்றும் ஒரு யூகத்தை கிளப்பி உள்ளது.
இந்த படம் பற்றி ரோஹித் ஷெட்டி கூறும்போது, “பத்து வருடங்களுக்கு முன்பு சிங்கம் படத்தை எடுத்தபோது அதைத் தொடர்ந்து சிங்கம் ரிட்டன்ஸ், சிம்பா, சூர்யவன்சி என தொடர்ந்து போலீஸ் படங்களாகவே எடுப்பேன் என நினைத்துக்கூட பார்க்கவில்லை. தற்போது அதன் தொடர்ச்சியாக இந்த சிங்கம் அகெய்ன் படம் துவங்கியுள்ளது” என்று கூறியுள்ளார்.