அஜித்குமாரின் பிறந்தநாளில் வெளியாகும் அஜித் ரேஸ் படம்! | கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் | பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” | 2025ல் கவனம் பெற்ற சிறிய படங்கள் | பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் |

ஹன்சிகா மோத்வானி நடித்துள்ள ஒரிஜினல் தமிழ் வெப் தொடர் 'மை3'. ஒரு கல் ஒரு கண்ணாடி, பாஸ் என்கிற பாஸ்கரன், சிவா மனசுல சக்தி படங்களை இயக்கிய ராஜேஷ் எம் இயக்கி உள்ளார். முகேன் ராவ், சாந்தனு ஆகியோர் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் ஜனனி, ஆஷ்னா ஜவேரி, அபிஷேக், சக்தி, சுப்பு பஞ்சு அருணாச்சலம் உள்ளிட்டவர்களும் நடித்துள்ளனர்.
ரொமான்டிக் காமெடியாக உருவாகியிருக்கும் இந்த தொடரின் கதை இதுதான்….
முகேன், ஒரு பணக்கார பிசினஸ்மேன். மனித தொடுதல் என்பது அவருக்கு ஒவ்வாமை. யாராவது அவரைத் தொட்டால் அவருக்கு அலர்ஜியாகிவிடும். இளம் விஞ்ஞானியாக வளர்ந்து வரும் சாந்தனுவால் உருவாக்கப்பட்ட, 'மை3' என்ற மனித உருவ ரோபோவை வாங்க ஆர்வமாக இருக்கிறார். ஆனால் உருவாக்கத்தின் போது ஏற்பட்ட சிக்கலில் செயலிழந்து போன 'மை3' ரோபோவிற்கு பதிலாக சாந்தனுவின் காதலி ஹன்சிகாவை ரோபோ என்று ஏமாற்றி முகன்ராவிடம் அனுப்புகிறார். முகேனை ஹன்சிகா சந்திக்கும் போது என்ன நடக்கிறது என்பதுதான் தொடரின் கதை.
கார்த்திக் முத்துக்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார், கணேசன் இசையமைத்துள்ளார். டிஷ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் நாளை (15ம் தேதி) வெளியாகிறது.