லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக அறியப்பட்டவர் சோனா. ஆரம்பத்தில் சிறு பட்ஜெட் படங்களில் நடித்து வந்த சோனா ரஜினியின் 'குசேலன்' படத்தில் வடிவேலுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார். 'கனிமொழி' என்ற படத்தை தயாரித்து, அதனால் பொருளாதார இழப்பை சந்தித்தார்.
வெங்கட்பிரபு, பிரேம்ஜி கூட்டணியில் இருந்த சோனா அந்த கூட்டணியில் இருந்த எஸ்.பி.பி.சரண் மீது பாலியல் புகார் கூறிவிட்டு அங்கிருந்து வெளியில் வந்தார். தற்போது மலையாள படங்களில் நடித்து வரும் சோனா, தனது வாழ்க்கை கதையை வெப் தொடராக இயக்கி, தயாரிக்கப் போவதாக கூறியுள்ளார்.
வெப் தொடருக்கு 'ஸ்மோக்கிங்' என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. இந்த தொடரை சோனாவே டைரக்டு செய்கிறார். சோனா கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை தேர்வு நடக்கிறது. படப்பிடிப்பை அடுத்த மாதம் தொடங்க திட்டமிட்டு உள்ளனர்.