சினிமாவில் எதுவும் நிரந்தரமில்லை! : நந்திதா | அனுஷ்கா பிறந்தநாளில் வெளியான 'கதனார்' படத்தின் அழகிய போஸ்டர்! | யஷ் படத்துடன் மோதுவதில் பயமில்லை : தெலுங்கு இளம் ஹீரோ தில் பேச்சு | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்திலிருந்து வெளியான பிரித்விராஜ் முதல்பார்வை | கமலின் 'நாயகன்' படத்தின் ரீரிலீஸுக்கு தடை விதிக்க மறுத்த நீதிமன்றம்! | கத்ரினா கைப் - விக்கி கவுஷல் நட்சத்திர தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது! | உருவக்கேலி செய்ததாக நடிகை கவுரி கிஷன் வேதனை | கமல் 237வது படத்தில் இணைந்த தொழில்நுட்ப கலைஞர்கள் | எனது பேட்டியை விஜய்க்கு எதிராக கட்டமைக்க முயற்சிக்காதீங்க : அஜித் | தெலுங்கிலும் இன்று வெளியான பிரணவ் மோகன்லால் ஹாரர் படம் |

இந்தியத் திரையுலகத்தில் ஒரு காலத்தில் 100 கோடி வசூல் என்றாலே ஆச்சரியமாக இருந்தது. இப்போது 500 கோடி வசூல் என்பதை ஓரளவிற்கு அடைய முடிகிறது. அதிலும் அடுத்தடுத்த மாதங்களில் வெளியான இரண்டு படங்கள் 500 கோடி வசூலைப் பெறுவது எல்லாம் அவ்வளவு எளிதில் நடக்கக் கூடிய விஷயமல்ல.
கடந்த மாதம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியான தமிழ்ப் படமான 'ஜெயிலர்' படம் தென்னிந்தியா மற்றும் உலக நாடுகளில் பெரும் வரவேற்பைப் பெற்று 500 கோடி வசூலைக் கடந்து 600 கோடிகளைத் தாண்டியும் போய்க் கொண்டிருக்கிறது.
இப்போது ஹிந்திப் படமான 'ஜவான்' படம் நான்கே நாட்களில் 500 கோடி வசூலைக் கடந்துள்ளது. அடுத்து 1000 கோடி வசூலை நோக்கி அந்தப் படம் போகுமா என ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.
ஆங்கிலத்தில் 'ஜெயிலர், ஜவான்' ஆகிய இரண்டு படங்களையும் எழுதும் போது 'J' என்ற ஆங்கில எழுத்தில்தான் வரும். அதனால், சென்டிமென்ட்டாக திரையுலகினல் இனி 'J' எனத் தொடங்கும் எழுத்தில் படங்களின் பெயர்களைத் தேடினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.