ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது | இந்தியன் 3 படத்தின் பணிகள் மீண்டும் துவங்கியது | இறுதி கட்டத்தில் 'லவ் மேரேஜ்' | பிளாஷ்பேக் : இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ்படம் | பிளாஷ்பேக் : லலிதா, பத்மினிக்காக காத்திருந்த ரசிகர்கள் | ஆஸ்கர் விருது வரை சென்ற 'லபாட்டா லேடீஸ்' படம் கதை காப்பி சர்ச்சையில் சிக்கியது | சினிமா ஆனது இந்தியாவின் முதல் மகாத்மாவின் வாழ்க்கை | 'பயர்' 50வது நாள் : சவாலான படங்களை தயாரித்து, இயக்க ஜே சதீஷ் குமார் முடிவு | ரத்தத்தால் அடா சர்மாவின் ஓவியம் வரைந்த ரசிகர் |
பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ், ஸ்ருதிஹாசன், ஜெகபதி பாபு, ஸ்ரேயா ரெட்டி மற்றும் பலர் நடித்துள்ள திரைப்படம் 'சலார்'. இதன் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் ஏற்பட்ட தாமதத்தினால் இப்படம் நவம்பர் அல்லது அடுத்த வருட பொங்கலுக்கு தள்ளிப்போவதாக தகவல்கள் சினிமா வட்டாரத்தில் பரவியது. இதனால் சலார் வெளியீட்டிற்கு திட்டமிட்ட செப்டம்பர் 28ம் தேதியில் இப்போது நிறைய படங்கள் ரிலீசுக்கு குவிகிறது.
அந்தவகையில், போயபட்டி சீனு இயக்கத்தில் ராம் பொத்தினேனி, ஸ்ரீலீலா இணைந்து நடித்துள்ள படம் 'ஸ்கந்தா'. ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு எஸ்.எஸ்.தமன் இசையமைக்கிறார். இப்படம் வருகின்ற செப்டம்பர் 15ம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவித்தனர். சலார் தள்ளிப்போவதால் இத்திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 28ம் தேதி அன்று தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது என இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.