மீண்டும் விளையாட்டு படத்தை கையில் எடுக்கும் அருண் ராஜா காமராஜ் | ஹிந்தி நடிகர் சதீஷ் ஷா காலமானார் | தனுஷ் தம்பியாக நடிக்க வேண்டியது : விஷ்ணு விஷால் | பிரபாஸ் படத்தில் இணைந்த இளம் நடிகை | ரஜினிகாந்த் எடுத்த புது முடிவு? | எனக்கு ஆர்வம் இல்லை : லியோ படப்பிடிப்பில் மகன் நடிகரிடம் திரிஷா சொன்ன வார்த்தை | பவர்புல்லான சவுண்ட் ஸ்டோரி : விவேக் ஓபராய் | கார் மோதி 3 பேர் விபத்தில் சிக்கிய விவகாரம் : விளக்கம் கூறி சர்ச்சையில் சிக்கிய நடிகை | அரசு மருத்துவமனை பின்னணியில் உருவாகும் 'பல்ஸ்' | ஆள் கடத்தல் வழக்கை ரத்து செய்ய லட்சுமி மேனன் மனுதாக்கல் |

அர்ஜுன், ஐஸ்வர்யா ராஜேஷ் முதன் முறையாக இணைந்து நடிக்கும் படம் 'தீயவர் குலைகள் நடுங்க'. 'பிக் பாஸ்' அபிராமி, ராம்குமார், ஜி.கே.ரெட்டி, லோகு, வேல.ராமமூர்த்தி, தங்கதுரை, பிராங்க் ஸ்டார் ராகுல், ஒ.ஏ.கே.சுந்தர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சரவணன் அபிமன்யு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு பரத் ஆசிவகன் இசையமைத்திருக்கிறார். அறிமுக இயக்குநர் தினேஷ் லட்சுமணன் இயக்கி உள்ளார். ஜி.எஸ்.ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் ஜி.அருள்குமார் தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்திருக்கிறது என படக் குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். இன்வஸ்டிகேஷன் திரில்லர் படமாக இது உருவாகி வருகிறது. இதில் ஐஸ்வர்யா பழிவாங்கும் பெண்ணாகவும், அர்ஜூன் அவரை கண்டுபிடிக்கும் போலீஸ் அதிகாரியாகவும் நடிப்பதாக கூறப்படுகிறது. படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படப்பிடிப்புகள் முடிந்துள்ள நிலையில் மற்ற பணிகள் நாளை முதல் தொடங்குகிறது. இந்த ஆண்டின் இறுதியில் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.