லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
நடிகர் பாபி சிம்ஹாவிற்கு கொடைக்கானல் பேத்துப்பாறை பகுதியில் 13 சென்ட் நிலம் உள்ளது. இதில், வீடு கட்டி வருகிறார். கட்டுமான பணிகளை கொடைக்கானலைச் சேர்ந்த ஜமீர், காசிம் முகமது செய்து வந்தனர். இவர்களுக்கும், பாபி சிம்ஹாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பணியை முடிக்க வலியுறுத்திய பாபி சிம்ஹாவை, அசிங்கமாக பேசியும், கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.
இவர்களோடு கொடைக்கானலைச் சேர்ந்த உசைன், பேத்துப்பாறையைச் சேர்ந்த மகேந்திரன் சேர்ந்து மிரட்டி உள்ளனர். இவர்கள் மீது கொலை மிரட்டல், ஏமாற்றுதல், அசிங்கமாக பேசுதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் எஸ்.ஐ., கிருஷ்ணகுமார் வழக்குப்பதிவு செய்துள்ளார்.