ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
மலையாள மக்களின் சிறப்பு மிக்க பண்டிகைகளில் ஒன்று ஓணம். நேற்று ஓணம் பண்டிகை உலகம் முழுவதிலும் உள்ள மலையாளிகளால் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. ஓணம் பண்டிகை என்றாலே மலையாளப் பெண்கள் வெள்ளை நிற ஓணம் புடவையை அணிந்து பண்டிகை கொண்டாடுவது வழக்கம். நேற்று தமிழகத்திலும் பல இளம் பெண்கள் ஓணம் புடவையை அணிந்து தங்களது சமூக வலைத்தளப் பக்கங்களில் பலவித போட்டோக்களைப் பதிவிட்டனர்.
நேற்று மலையாள நடிகைகள் மட்டுமல்லாது, தமிழ் நடிகைகள், மற்ற மொழி நடிகைகள், டிவி தொகுப்பாளினிகள் என பலரும் புடவைகளில் விதவிதமான புகைப்படங்களை எடுத்து அவர்களது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். நேற்று எந்த பக்கத்தைத் திறந்தாலும் அந்த புகைப்படங்களே நிறைந்திருந்தன.
அவற்றை வைத்து ரசிகர்கள் யார் அந்தப் புடவையில் அழகாக இருக்கிறார்கள் என ஒரு சர்வே நடத்திவிட்டார்கள். பல ரசிகர்களின் வாக்குபடி கீர்த்தி சுரேஷ் தான் அந்த சர்வேயில் வெற்றி பெற்றுள்ளார்.