4000 கோடி செலவில் 'ராமாயணா' படம்!! | சரோஜா தேவி மறைவு - வழக்கம் போல இரங்கல் தெரிவிக்காத நடிகர்கள், நடிகைகள் | 'கூலி' வியாபாரம் இவ்வளவு கோடி நடக்குமா? : சுற்றி வரும் தகவல் | சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி |
மாவீரன் படத்தை அடுத்து தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் தனது 21 வது படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். நேற்று அவர் தனது 13வது திருமண நாளை கொண்டாடியுள்ளார். அதாவது சிவகார்த்திகேயன் - ஆர்த்தி தம்பதிக்கு 2010 ஆகஸ்டு 27ம் தேதி திருமணம் நடைபெற்றது. தற்போது அவர்களுக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். இந்த நிலையில் நேற்று சிவகார்த்திகேயன் தனது குடும்பத்தாருடன் தனது 13 வது திருமண நாளை கொண்டாடி இருக்கிறார். அதோடு தனது மனைவியுடன் தான் எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு, என் சந்தோஷ கண்ணீரே என்று நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.