பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' |
மோகன்லால் நடித்து வரும் பான் இந்தியா படம் விருஷபா. மோகன்லாலுடன் ரோஷன் மேகா, ஷனாயா கபூர், சஹ்ரா எஸ் கான், ஸ்ரீகாந்த் மேகா மற்றும் ராகினி திவேதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 2024ம் ஆண்டின் மிகப்பெரிய படங்களில் ஒன்றாக விருஷபா இருக்கும். என்கிறார்கள்.
இந்த படத்தை கனெக்ட் மீடியா மற்றும் பாலாஜி டெலிபிலிம்ஸ் ஏவிஎஸ் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கிறது. நந்த கிஷோர் இயக்கும் இந்த படம் தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டு, ஹிந்தி, கன்னடம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
கடந்த 24ம் தேதி இதன் ஒருகட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் படத்தில் மோகன்லாலின் புதிய தோற்றம் வெளியிடப்பட்டுள்ளது. ஹிஸ்டாரிக்கல் பேண்டசி படமாக உருவாகி வருகிறது. புதிய தோற்றத்தில் மோகன்லால் மன்னருக்கான உடையில் கையில் வாளுடன் மிரட்டலான லுக்கில் தோற்றமளிக்கிறார். இந்த தோற்றம் இணையத்தில் வைரலாகி உள்ளது.