லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
கன்னட திரை உலகில் மிக முக்கிய நடிகர்களில் ஒருவர் சேலஞ்சிங் ஸ்டார் என அழைக்கப்படும் நடிகர் தர்ஷன். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இவர் கன்னட பத்திரிக்கையாளர் ஒருவரை தரக்குறைவாக பேசியதாக ஒரு ஆடியோ வெளியானது. அதைத் தொடர்ந்து எழுந்த எதிர்ப்பால் கன்னட மீடியாக்கள் இவர் மீது இரண்டு வருட தடை விதித்தன.
அதன்படி மீடியாக்களில் தர்ஷன் பற்றிய எந்த செய்திகளையும் வெளியிடாமல் மீடியாக்கள் புறக்கணித்தன. இந்த நிலையில் தற்போது முக்கியமான கன்னட மீடியாக்களின் எடிட்டர்களுடன் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் தர்ஷன் மீதான தடை விலக்கிக் கொள்ளப்பட்டது. இருதரப்பிற்குமான சுமூகமான பேச்சுவார்த்தை ஏற்பாட்டை பிரபல கன்னட தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் முன்னின்று செய்திருந்தார்.
இதனை தொடர்ந்து பேசிய நடிகர் தர்ஷன், “இந்த வரலட்சுமி நோன்பு நாளில் இப்படி ஒரு முடிவு எடுக்கப்பட்டது சந்தோஷம் அளிக்கிறது. நான் எனது செயலுக்கு எப்போதுமே வருத்தமோ மன்னிப்போ கேட்க தயங்கியது இல்லை. இப்போதும் கன்னட மீடியாக்களிடம் எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். எனது திரையுலக வாழ்க்கை இந்த அளவிற்கு உயர்ந்ததற்கு அவர்களுக்கும் மிகப்பெரிய பங்கு இருக்கிறது” என்று கூறியுள்ளார்.