Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

அறிமுகப்படுத்திய இயக்குனருடன் 11 வருடத்திற்கு பிறகு இணைந்த இஷா தல்வார்

27 ஆக, 2023 - 10:14 IST
எழுத்தின் அளவு:
It's-a-wrap-for-Vineeth-Sreenivasan's-'Oru-Jaathi-Oru-Jaathakam'

மும்பையை சேர்ந்த நடிகை இஷா தல்வார் முதன்முதலாக நடிகையாக அறிமுகமானது மலையாளத்தில் தான். கடந்த 2012ல் வெளியான 'தட்டத்தின் மறயத்து' என்கிற படத்தில் தான். நிவின்பாலிக்கு ஜோடியாக இவர் அறிமுகமான இந்த படத்தை இயக்குனர் வினீத் சீனிவாசன் இயக்கியிருந்தார். அதைத்தொடர்ந்து மலையாளத்தில் சீரான இடைவெளியில் படங்களில் நடித்து வந்தார் இஷா தல்வார். இந்த நிலையில் கிட்டத்தட்ட 11 வருடங்கள் கழித்து மீண்டும் வினீத் சீனிவாசன் படத்தில் இணைந்துள்ளார் இஷா தல்வார்.

ஆனால் இந்த படத்தில் இயக்குனராக அல்ல, கதாநாயகனாக நடிக்கிறார் வினித் சீனிவாசன். ‛ஒரு ஜாதி ஒரு ஜாதகம்' என்கிற டைட்டிலில் உருவாகியுள்ள இந்த படத்தில் நிகிலா விமல் இன்னொரு கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்தை எம்.மோகனன் இயக்குகிறார். சென்னை கண்ணூர் ஆகிய பகுதிகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் தற்போது மொத்த படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஸ்கந்தா படத்தின் டிரைலரை வெளியிடும் பாலையாஸ்கந்தா படத்தின் டிரைலரை வெளியிடும் ... விருஷபா படப்பிடிப்பு ; ஒரு மாத நீண்ட ஷெட்யூலை நிறைவு செய்த மோகன்லால் விருஷபா படப்பிடிப்பு ; ஒரு மாத நீண்ட ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)