நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் மற்றும் பலர் நடித்து கடந்த வருடம் வெளிவந்த 'விக்ரம்' படம் 400 கோடிக்கும் அதிகமான வசூலைப் பெற்று சாதனை படைத்தது. தமிழகத்தில் இதுவரையிலும் வெளியான படங்களில் அதிக லாபத்தைக் கொடுத்த படம் என்று சொன்னார்கள்.
தற்போது அந்த சாதனையை 'ஜெயிலர்' படம் முறியடித்துவிட்டதாக சமூக வலைத்தளங்களில் செய்திக பரவி சண்டை நடந்து வருகிறது. 'ஜெயிலர்' படத்தின் வசூலை வேண்டுமென்றே அதிகமாகச் சொல்லி வருவதாக கமல்ஹாசன் ரசிகர்கள் 'டிரோல்' செய்து வருகிறார்கள். அதே சமயம், 'ஜெயிலர்' படத்திற்கு வார நாளான நேற்று கூட ரசிகர்களின் வருகை அதிகமாக இருந்ததாகவே தியேட்டர் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.
தெலுங்கில் மட்டும் 50 கோடி வசூலை கடந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவில் இரண்டாவது வாரத்தைத் தொட்டுள்ள இந்தப் படத்தின் வசூல் தற்போது 4.5 மில்லியன் யுஎஸ் டாலரைக் கடந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள். தமிழில் 300 தியேட்டர்களிலும், தெலுங்கில் 200 தியேட்டர்களிலும் அங்கு படம் ஓடிக் கொண்டிருக்கிறதாம். தெலுங்கு வசூல் மட்டும் 1 மில்லியன் டாலரைக் கடந்துள்ளது.
கர்நாடகாவில் 40 கோடி வசூலைக் கடந்து 50 கோடி வசூலை நெருங்கும் என்கிறார்கள். கேரளாவில் 35 கோடி வசூலைக் கடந்துள்ள நிலையில் முதல் முறையாக ஒரு தமிழ்ப் படம் அங்கு 50 கோடியைக் கடக்க வாய்ப்புள்ளது என்றும் சொல்கிறார்கள். இப்படி புதிய சாதனைகளைப் படைத்து வரும் 'ஜெயிலர்' படம் இந்த வார இறுதிக்குள் 500 கோடி வசூலைத் தாண்டினால் ஆச்சரியப்படுவதற்கில்லை என்பதே பாக்ஸ் ஆபீஸ் வட்டாரத் தகவலாக உள்ளது.