அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியாகி, வரவேற்பை பெற்றுள்ள படம் ‛ஜெயிலர்'. இந்த படத்தில் அனிருத் இசையில் தமன்னா ஆடிய ‛காவாலா' பாடல், படம் வெளியீட்டிற்கு முன்பே ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. உலகம் முழுக்க டிரெண்டிங்கில் இடம் பிடித்த இந்த பாடலுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் ரீல் வீடியோ வெளியிட்டு வந்தனர்.
இந்நிலையில், ஜெயிலர் படத்தின் "காவாலா" பாடலுக்கு இந்தியாவுக்கான ஜப்பான் தூதர் ஹிரோஷி சுசுகி நடனமாடும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும், ஜப்பான் தூதர் ஹிரோஷி சுசுகி, "ரஜினிகாந்த் மீதான எனது அன்பு தொடரும்" சமுக வலைதளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.
வீடியோ லிங்க் : https://twitter.com/HiroSuzukiAmbJP/status/1691731446917214612