விஜய் நிதானமாக முடிவெடுக்க வேண்டும்: சிவராஜ்குமார் வேண்டுகோள் | 60 கோடி செலுத்த ஷில்பா ஷெட்டி, ராஜ் குந்த்ராவுக்கு நீதிமன்றம் உத்தரவு | நயன்தாரா, கவின் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் அறிவிப்பு | திரையுலகில் 22 ஆண்டுகள்: நயன்தாரா நெகிழ்ச்சி | துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் |
கிடாரி பட இயக்குனர் பிரசாந்த் முருகேசன் இயக்கத்தில் அதர்வா, ஜெய் பீம் மணிகண்டன் இணைந்து நடித்துள்ள வெப் தொடர் 'மத்தகம்'. இதில் நிகிலா விமல், கவுதம் மேனன், திவ்யதர்ஷினி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தர்புகா சிவா இசையமைத்துள்ள இந்த தொடரை ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரித்துள்ளனர். இந்த தொடர் நேரடியாக டிஸ்னி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம், மராத்தி, பெங்காலி ஆகிய மொழிகளில் ஆகஸ்ட் 18ம் தேதி வெளியாகிறது.
ஏற்கனவே இதன் டீசர், டிரைலர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. 9 எபிசோடுகளாக இந்த மத்தகம் உருவாகி உள்ளது. இதன் கடைசி எபிசோடில் இரண்டாம் சீசனுக்கான புதிய கதாபாத்திரத்தை அறிமுகம் செய்கிறார்கள். முதல் சீசனின் வரவேற்பைப் பொறுத்து இரண்டாம் சீசனுக்கான படப்பிடிப்பு துவங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.