நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் | 3 மணி நேரம் 40 நிமிடம் ஓடப் போகும் 'பாகுபலி தி எபிக்' | 3 ஹீரோக்கள் இணையும் படம் |
பீல்குட் லவ் டிராமா சார்பில் வினோத் குமார் சென்னியப்பன் தயாரித்துள்ள படம் 'வான் மூன்று'. ஏம்ஆர் முருகேஷ் இயக்கி உள்ளார். இந்தப் படத்தில் அம்மு அபிராமி, ஆதித்யா பாஸ்கர், வினோத் கிஷன், அபிராமி வெங்கடாசலம், லீலா தாம்சன், டெல்லி கணேஷ் உள்பட நடித்துள்ளனர். அபிராமி வெங்கடாசலம், அம்மு அபிராமி இணைந்து நடித்துள்ள முதல் படம். ஆஹா ஓடிடி தளத்தில் இன்று வெளியாகி உள்ளது.
படம் பற்றி இயக்குனர் முருகேஷ் கூறியதாவது: வான் என்பதற்கு தமிழில் நிறைய அர்த்தங்கள் உள்ளது. இதில் சிலரின் வாழ்க்கையையும், அவர்களின் காதலையும் பற்றி சொல்வதற்காகவே 'வான் மூன்று' என்ற தலைப்பை தேர்ந்தெடுத்தோம். அனைத்து வயதினரையும் கனெக்ட் செய்ய வேண்டும் என்பதற்காக நிறைய மாற்றங்கள் இந்தக் கதையில் செய்தோம். பல நடிகர்களிடம் பேசிதான் இறுதியாக இந்தக் கதைக்குள் அபிராமி, ஆதித்யா எல்லாரும் வந்தார்கள். இது என்னுடைய முதல் படம் என்பதால், மெதுவாக நகர்ந்தாலும் பரவாயில்லை என்று ஒரு பீல் குட் படமாக உருவாக்கினேன். வெவ்வேறு வயதினரிடையே உருவாகும், காதலையும், பிரிவையும் சொல்லும் படம். என்றார்.