இப்ப, தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோயின் யார் தெரியுமா? | சூர்யாவின் ‛கருப்பு' ரிலீஸ் எப்போது? | ராஷ்மிகாவின் ‛மைசா' படத்தில் இணையும் புஷ்பா 2 வில்லன் | பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்தது | நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா |
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் ஒரு சில படங்கள் வெற்றி பெற்றதாக கூறி ஒரு வாரத்திற்குள்ளேயே சக்சஸ் மீட் நடத்துவது வழக்கம். ஆனால் படங்கள் தியேட்டர்களில் 100 நாட்கள் ஓடியதாக நடைபெறும் கொண்டாட்டங்கள் ரொம்பவும் குறைவே. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தெலுங்கில் நானி, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான தசரா திரைப்படம் சில திரையரங்குகளில் 100 நாட்களை தொட்டுள்ளது.
ஸ்ரீகாந்த் ஓடேலா இந்த படத்தை இயக்கியிருந்தார். மேலும் இந்த படத்தில் தீக்ஷித் ஷெட்டி, சமுத்திரக்கனி மற்றும் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ, சாய்குமார் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இன்றைய சூழலில் இது ஒரு குறிப்பிடத்தக்க சாதனைதான். இந்த நிலையில் படக்குழுவினருக்கு கேடயம் வழங்கி இந்த வெற்றியை கொண்டாடியுள்ளனர் படத்தின் தயாரிப்பாளர்கள். இந்த நிகழ்வில் படத்தின் நாயகன் நானி, இயக்குனர் ஸ்ரீகாந்த் ஓடேலா உள்ளிட்ட சிலர் பங்கேற்றனர்.