இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு | "நான்தான் பர்ஸ்ட்" என்ற ராஷ்மிகாவின் கருத்துக்கு எதிர்ப்பு | எனக்கு வராத சம்பளத்தை கொண்டு இரண்டு படங்கள் தயாரிக்கலாம்: கலையரசன் வருத்தம் | கதை நாயகியாக நடிக்கும் மிஷா கோஷல் |
அகண்டா பட இயக்குனர் போயபட்டி சீனு இயக்கத்தில் நடிகர் ராம் பொத்தினேனி நடிப்பில் உருவாகி வரும் படம் 'ஸ்கந்தா' . கதாநாயகியாக நடிகை ஸ்ரீ லீலா நடிக்கிறார். ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு எஸ்.எஸ்.தமன் இசையமைக்கிறார். இப்படம் வருகின்ற செப்டம்பர் 15ம் தேதி அன்று தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது. ஏற்கனவே இப் படத்திலிருந்து டீசர், பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில் பிரமாண்ட அரங்கு அமைத்து நடைபெற்ற கடைசி பாடல் காட்சியோடு ஸ்கந்தா படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்துள்ளதாக படக்குழுவினர்கள் அறிவித்துள்ளனர். பெரும் பொருட்செலவில் கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விரைவில் தொடங்குகிறது.