இப்ப, தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோயின் யார் தெரியுமா? | சூர்யாவின் ‛கருப்பு' ரிலீஸ் எப்போது? | ராஷ்மிகாவின் ‛மைசா' படத்தில் இணையும் புஷ்பா 2 வில்லன் | பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்தது | நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா |
அறிமுக இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒதலா இயக்கத்தில் நடிகர் நானி நடிப்பில் கடந்த வாரத்தில் வெளியான திரைப்படம் தசரா. இதில் நாயகியாக கீர்த்தி சுரேஷூம், நடிகர்கள் சமுத்திரக்கனி, சாய் குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்தனர்.
எஸ்.எல்.வி சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் வெளியாகி ஆறு நாட்களில் உலகளவில் ரூ. 100 கோடி எட்டியுள்ளதாக படக்குழு அறிவித்தனர்.
இந்நிலையில் இந்த திரைப்படம் வெற்றியை கொண்டாடும் விதமாக தயாரிப்பாளர் சுதாகர் செருக்குரி படக்குழுவினர் அனைவருக்கும் 10 கிராம் தங்க நாணயங்கள் பரிசாக வழங்கியுள்ளார். இதை தொடர்ந்து இப்படத்தின் இயக்குனருக்கு BMW காரை பரிசாக அளித்துள்ளார் தயாரிப்பாளர். இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.