லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
துணிவு படத்தை அடுத்து அஜித் நடிக்கவிருக்கும் விடாமுயற்சி படத்தை மகிழ்திருமேனி இயக்குகிறார். இந்த படத்தின் ஆரம்ப கட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இம்மாதம் இறுதியில் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில், பின்னர் தமன்னா நடிப்பதாக கூறப்பட்டது. ஆனால் இப்போது இப்படத்தில் திரிஷா, தமன்னா ஆகிய இருவருமே நடிப்பதாக கூறுகிறார்கள். மேலும் இதில் அர்ஜுன், அர்ஜுன் தாஸ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்களாம். அந்த வகையில் ஏற்கனவே அஜித்துடன் இணைந்து மங்காத்தா படத்தில் நடித்த அர்ஜுன், திரிஷா ஆகிய இருவரும் மீண்டும் இந்த படத்தில் இணைய இருக்கிறார்கள்.