''நான் அதிர்ஷ்டசாலி'': நல்ல நண்பராக மணிகண்டன் கிடைத்த மகிழ்ச்சியில் ஷான்வி | 'கேம் சேஞ்சர்'--ல் விட்டதை 'பெத்தி'யில் பிடித்த ராம் சரண் | தயாரிப்பாளர் எம்.ராமநாதன் காலமானார் | குட் பேட் அக்லி - எந்த விழாவும் இல்லை, எந்த சந்திப்பும் இல்லை | ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் வந்துள்ள ஹரி | மாரீசன் படத்தில் கோவை சரளா | உங்கள் ஊகங்களை நிறுத்துங்கள்: ரசிகருக்கு அட்வைஸ் செய்த மாளவிகா மோகனன் | 'சந்தோஷ்' படத்தை வெளியில் திரையிடுவேன் : பா ரஞ்சித் அடாவடி | பிளாஷ்பேக்: பைந்தமிழ் கற்பதில் தாமதம்; பட வாய்ப்பை இழந்த நடிகை பண்டரிபாய் | மே 16ல் ரீ-ரிலீஸாகும் ஆட்டோகிராப் |
ஜெய் பீம் பட இயக்குனர் தா.சே.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் தனது 170வது படத்தில் நடிக்கிறார். லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். ஏற்கனவே இது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இப்படத்தில் ரஜினிகாந்த் உடன் இணைந்து அமிதாப்பச்சன், நானி உள்ளிட்டோர் நடிப்பதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் தற்போது கிடைத்த தகவலின் படி, இந்த படத்தில் பிரபல மலையாள நடிகர் பஹத் பாசில் மற்றும் மலையாள நடிகை மஞ்சு வாரியர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சிலரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடக்கிறது. அந்தவகையில் ‛ஜெயிலர்' படம் போன்று ரஜினி 170 படமும் மல்டி ஸ்டாரர் படமாக உருவாக உள்ளது.