5 படங்கள் ரிலீஸ் ஆகியும் ஓபனிங் இல்லாத முதல்நாள் வசூல் | முக்குத்தி அம்மன் 2 கிளைமாக்ஸ் : சென்டிமென்ட் ஆக குஷ்பு ஆடுகிறாரா? | அர்ஜூன், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் கிரைம் கதை | யாருக்கோ... ஏதோ சொல்கிறார் தீபிகா படுகோனே… | மீண்டும் ஓடிடியில் 'குட் பேட் அக்லி' : இளையராஜா பாடல்கள் மாற்றம் | 2026 ஆஸ்கர் - இந்தியா சார்பில் தேர்வான 'ஹோம்பவுண்ட்' | விளம்பர படப்பிடிப்பின் போது ஜூனியர் என்டிஆருக்கு காயம்! | விடைப்பெற்றார் ரோபோ சங்கர்; கண்ணீர் மல்க திரையுலகினர், ரசிகர்கள் பிரியாவிடை | 'டிரெயின்' படத்திற்காக களத்தில் இறங்கிய தாணு! | 'ஓ.ஜி' படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு! |
நெல்சன் திலீப்குமார் தற்போது ரஜினிகாந்த்தை வைத்து இயக்கியுள்ள தனது நான்காவது படம் ‛ஜெயிலர்'. நான்கு படங்களிலும் அனிருத் தான் தொடர்ந்து இசையமைத்து வருகிறார். நான்கு படங்களிலும் ஏதோ ஒரு பாடல் ரசிகர்களை ஆட்டிப்படைக்கும் பாடலாக வெளியாகி விடுவது நெல்சனுக்கு கிடைத்த ஜாக்பாட் என்று சொல்லலாம். அந்த வகையில் ஜெயிலர் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள காவாலா என்கிற பாடலும் அதற்கு தமன்னா ஆடும் வித்தியாசமான நடன அசைவுகளுடன் கூடிய நடனமும் 6 முதல் 60 வயது உள்ளவர்களையும் வசிகரித்துள்ளது. இதுவரை வெளியான பாடல்களிலேயே அதிக அளவில் ரீல்ஸ் வீடியோக்கள் வெளியாகி இருக்கும் பாடல் என்றால் அது இதுவாகத்தான் இருக்கும்.
ரசிகர்கள் மட்டுமல்லாது திரையுலக பிரபலங்கள் பலரும் இந்த பாடலுக்கு நடனமாடி வீடியோக்கள் வெளியிட்டு வருகின்றனர். இந்த நிலையில் இந்த படத்தில் மிக முக்கியமான வேடத்தில் நடித்துள்ள கன்னட நடிகர் சிவராஜ்குமாரையும் இந்த காவாலா ஜுரம் விட்டு வைக்கவில்லை. சமீபத்திய ஒரு பேட்டியின்போது தொகுப்பாளர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க சில நொடிகள் காவலா பட பாடல் ஸ்டெப்ஸ் ஆடிக்காட்டி அசத்தினார் சிவராஜ்குமார். ஆனாலும் இந்த நடனம் தமன்னாவுக்கு தான் மிக பொருத்தமாக இருக்கும் என்று தனது பாராட்டுகளையும் தமன்னாவிற்கு அவர் தெரியப்படுத்தினார்.