தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை | சூரியின் ‛மண்டாடி' படத்தில் இணைந்த இளம் நடிகர்! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை எப்போது? | 'பெத்தி' படத்தில் வயதான தோற்றத்தில் ஜெகபதி பாபு | அஜித்குமாரின் பிறந்தநாளில் வெளியாகும் அஜித் ரேஸ் படம்! | கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் | பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” | 2025ல் கவனம் பெற்ற சிறிய படங்கள் | பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் |

ரஜினிகாந்த், ஐஸ்வர்யா நடிப்பில் 2010ம் ஆண்டு வெளியான படம் 'எந்திரன்'. ஷங்கர் இயக்கி இருந்தார். இந்த படம் வெளியான பிறகு இந்த படத்தின் கதை என்னுடையது என்று பலரும் வழக்கு தொடர்ந்தனர். இதில் ஆரூர் தமிழ்நாடன் என்ற எழுத்தாளர் தொடர்ந்த வழக்கு சமீபத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த நிலையில் இன்னொரு வழக்கும் நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது. எந்திரன் திரைப்படத்தின் கதை மீது உரிமை கோரி கே.கே.சண்முகம் என்ற பாலகங்காதர் என்பவர் கடந்த 2011ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
சண்முகம் தாக்கல் செய்த மனுவில் ''ரோபோ அங்கிள்' என்ற பெயரில் 1989ம் ஆண்டு கதை எழுதினேன். இந்த கதையை பல தயாரிப்பாளர்களிடம் சொல்லியுள்ளேன். இந்த கதை விவாதத்தின் போது 2 முறை இயகுனர் ஷங்கர் கலந்து கொண்டார். இதன்பின்னர், என்னுடைய கதையை திருடி 'எந்திரன்' என்ற பெயரில் திரைப்படம் எடுத்துள்ளார். எனவே, எனக்கு 2 கோடியே 25 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும். என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. 'ரோபோ அங்கிள்' கதையை மனுதாரார் பதிவு செய்யவில்லை. மேலும் ஷங்கர் தரப்பில் சொல்லப்பட்டுள்ள கருத்துகள் ஏற்புடையதாக இருக்கிறது. அதனால் இந்து வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.