தனுஷ், மோகன்லால் கூட்டணியை உருவாக்க முயற்சி | மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஹிருத்திக் ரோஷன் | முகேன் ராவ் நடிக்கும் புதிய படம் நிறம் | காந்தி கண்ணாடி முதல் மதராஸி வரை.... ஒவ்வொன்னுன் செம வொர்த்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் | மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா | மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ? |
கமல் நடித்த தூங்காவனம், விக்ரம் நடித்த கடாரம் கொண்டான் ஆகிய படங்களை இயக்கியவர் ராஜேஷ் எம்.செல்வா. கடைசியாக இரை என்கிற வெப் சீரியஸ் இயக்கினார். தற்போது புதிய படத்தை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, தமிழ் , தெலுங்கு என இரு மொழிகளில் ராஜேஷ் .எம். செல்வா இயக்கும் இந்த படத்தில் காற்று வெளியிடை, செக்க சிவந்த வானம் போன்ற படங்களில் நடித்த அதிதி ராவ் ஹைதரி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நாயகியை முன்னிலைப்படுத்தி இந்தப்படம் உருவாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதை தொடர்ந்து ராஜேஷ் எம் செல்வா மீண்டும் ஒரு வெப் சீரிஸை இயக்கவுள்ளார். விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள் .