'குபேரா' தமிழ், தெலுங்கில் தான் படமாக்கினோம் : இயக்குனர் சேகர் கம்முலா தகவல் | மணிரத்னம் பட வாய்ப்பு கைநழுவி போனது இப்படித்தான்: மலையாள நடிகர் விரக்தி | தக் லைப் : கர்நாடகாவில் அடுத்த வாரம் ரிலீஸ் | விமர்சனத்திற்கு பணம் கேட்பதா ? கேரளாவிலும் இயக்குனர் கிளப்பிய சர்ச்சை.. போலீஸிலும் புகார் | மம்முட்டியை தொடர்ந்து தனது வீட்டையும் சுற்றுலா பயணிகளுக்கு வாடகைக்கு விட்ட மோகன்லால் | திருப்பதி அடிவாரத்தில் நடுரோட்டில் பிச்சை எடுக்க வைத்து விட்டார் சேகர் கம்முலா! வைரலாகும் தனுஷின் வீடியோ | ஜூனியர் என்டிஆர்-க்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த்! | கவர்ச்சிக்கு நோ சொல்லும் ரக்ஷிதா | மலேசியாவில் ஓய்வெடுக்கும் பாரதிராஜா | நெல் ஜெயராமன் மகனுக்கு உதவும் சிவகார்த்திகேயன் |
ரோமியோ ஜூலியட், போகன் ஆகிய படங்களை இயக்கியவர் லக்ஷ்மன். இவர் ஜெயம் ரவியை வைத்து கடைசியாக இயக்கிய பூமி திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகி நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றது. இதனால் லக்ஷ்மனுக்கு அடுத்த பட வாய்ப்பில் தாமதம் ஆனது. இந்நிலையில் பிரபல கன்னட நடிகர் நிகில் குமாரா சுவாமியை வைத்து கன்னடம், தமிழ் என இரு மொழிகளில் உருவாக உள்ள படத்தை லக்ஷ்மன் இயக்க போகிறார். லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்குகிறது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிறது.