பிரபாஸ் படத்திலிருந்து நீக்கப்பட்டாரா ராஷ்மிகா? | விஜய் சேதுபதி படத்தில் தபு : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கண்ணப்பா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'ரெட்ரோ'வில் 90களின் காதல் கதை : கார்த்திக் சுப்பராஜ் தகவல் | பிளாஷ்பேக் : இளையராஜாவின் பாடலுக்காக உருவான படம் | சினிமா சங்கப் பிரச்னைகளில் அரசு தலையிட வேண்டும் : ஆர்கே செல்வமணி கோரிக்கை | உறுதியானது 'லியோ - குட் பேட் அக்லி' ஒற்றுமை | தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணி : மாறிய தயாரிப்பு நிறுவனம் | ஷங்கர் வழியில் எக்ஸ் தளத்தை 'ஆப்' செய்த ஏஆர் முருகதாஸ் | ஆளே இல்லாத வீட்டிற்கு ஒரு லட்சம் கரண்ட் பில் : கங்கனா ஏற்படுத்திய பரபரப்பு |
வெற்றிமாறன் இயக்கிய ஆடுகளம் படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடித்தவர் டாப்சி. அதன்பிறகு ஆரம்பம், வந்தான் வென்றான் என பல படங்களில் நடித்தவர், 2021ம் ஆண்டு விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அனபெல் சேதுபதி என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் மீண்டும் தான் ஒரு தமிழ் படத்தில் நடித்து வருவதாக அவர் ஒரு தகவல் வெளியிட்டு இருக்கிறார். அதில், ஏலியன் சம்பந்தப்பட்ட கதையில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இது ஒரு அழுத்தமான கான்செப்டில் உருவாகிறது. நான் இதில் ஏலியனாக நடிக்கவில்லை என்று தெரிவித்திருக்கிறார் டாப்சி. அதோடு ஏற்கனவே நான் நடித்து வெளியான கேம் ஓவர் படத்தை ரசித்தவர்களுக்கு இந்த படம் கண்டிப்பாக பிடிக்கும். இந்த படத்தில் நடிப்பது எனக்கு ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.