தந்தை மறைவு : சமந்தா உருக்கமான பதிவு | கர்மா உங்களை விடாது : நயன்தாரா பதிவு யாருக்கு? | திரிஷா நடித்துள்ள மலையாள படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு | எந்த விதி மீறலும் இல்லை : தனுஷ் நோட்டீஸிற்கு நயன்தாரா பதில் | மீனாட்சி சவுத்ரி எடுத்த முடிவு | குடும்பமே இணைந்து தயாரிக்கும் 'பேமிலி படம்' | 'விடாமுயற்சி' டீசர்: அஜித் ரசிகர்களை மகிழ வைத்த மகிழ் திருமேனி | விஜய் ஆண்டனி குடும்பத்தில் இருந்து வரும் வாரிசு நடிகர் | மத உணர்வுகளை புண்படுத்துவதாக கூறி கேரள தியேட்டர்களில் இருந்து தூக்கப்பட்ட துல்கர் நண்பரின் படம் | யோகி பாபு நடிக்கும் ‛பரலோகத்தில் இருக்கும் எங்கள் பிதாவே' |
நடிகை சமந்தா 'மயோசிடிஸ்' என்கிற தசை அழர்ச்சி நோயால் அவதிப்பட்டு வருகிறார். இதற்காக புதிய படங்களில் ஒப்புக் கொள்வதை நிறுத்தி விட்டு, கையில் இருந்து படங்களை முடித்து கொடுத்து விட்டு வருகிற 6 மாதங்களுக்கு ஓய்வும், சிகிச்சையும் எடுத்துக் கொள்ள இருக்கிறார். இந்த நிலையில் இதுபோன்ற ஒரு விநோத நோயால் தானும் பாதிக்கப்பட்டிருப்பதாக நடிகை நந்திதா ஸ்வேதா கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: நான் 'பைப்ரோமியால்ஜியா' என்ற தசைக் கோளாறால் அவதிப்படுகிறேன். இதனால் எனது உடல்நிலையில் ஏற்ற இறக்கம் ஏற்பட்டுள்ளது. ஒரு சிறிய வேலை கூட தசைகளில் பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதனால் கனமான உடற்பயிற்சிகளை செய்ய முடியாது. சில நேரங்களில் உடல் அசைவுகளுக்கே சிரமப்பட வேண்டியிருக்கிறது. பைப்ரோமியால்ஜியா என்பது தசைக் கோளாறு ஆகும், இது பாதிக்கப்பட்டவரின் தசைகள் மற்றும் மூட்டுகளில் வலியை ஏற்படுத்துகிறது. இது மிக விரைவாக சோர்வை ஏற்படுத்துகிறது. இது தவிர, மோசமான நினைவாற்றல் மனநோயின் அறிகுறிகளை ஏற்படுத்தும். ஆனால் 'ஹிடிம்பா' படத்திற்காக இதையெல்லாம் தாண்டி உழைத்திருக்கிறேன். தூங்காமல் உழைத்தேன். படத்துக்காக இதையெல்லாம் சகித்துக் கொண்டு உடல் எடையை குறைத்தேன். இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.
'நந்தா லவ்ஸ் நந்திதா' என்ற கன்னட படத்தின் மூலம் அறிமுகமான நந்திதா, அட்டக்கத்தி படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். அதன் பிறகு எதிர்நீச்சல், முண்டாசுபட்டி, இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, நளனும் நந்தினியும், புலி, அஞ்சல, உள்குத்து உள்பட பல படங்களில் நடித்தார். சமீபகாலமாக அவருக்கு தமிழில் பெரிய வாய்ப்புகள் இல்லை. இதனால் தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது 'ஹிடிம்பாக்' என்ற கன்னட படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இந்த படத்தின் புரமோசன் நிகழ்வில்தான் தனது உடல்நல பிரச்சினை பற்றி நந்திதா தெரிவித்திருக்கிறார்.