இயக்குனராக புதிய பிறப்பு கொடுத்தவர் நாகார்ஜுனா : ராம்கோபால் வர்மா நெகிழ்ச்சி | என்னுடைய தொடர் வெற்றிக்கு இதுதான் காரணம்: விஷ்ணு விஷால் | மணிரத்னம் படத்தில் நடிப்பது பெரிய ஆசீர்வாதம்: பிரியாமணி | கேரள அரசு விருது குழுவின் தலைமையை கடுமையாக விமர்சித்த மாளிகைப்புரம் சிறுமி | துல்கர் சல்மானுக்கு பறந்த திடீர் நோட்டீஸ்! | மகேஷ்பாபுவின் கிண்டலுக்கு பிரியங்கா சோப்ரா பதில் | புராண பின்னணியில் புதிய அனிமேஷன் பாகுபலி : டீசர் வெளியீடு | தென்னிந்திய சினிமா தான் 'பெஸ்ட்', ஹிந்தியில் 'ஸ்லோ': ஷ்ரத்தா தாஸ் | கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் விஜய் சேதுபதி | நவம்பர் 21ல் திரைக்கு வரும் ‛மிடில் கிளாஸ்' : டீசர் வெளியீடு |

துணிவு படத்தை அடுத்து விடாமுயற்சி படத்தில் நடிக்கப் போகிறார் அஜித்குமார். மகிழ்திருமேனி இயக்கும் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசை அமைக்கிறார். இப்படம் குறித்த அறிவிப்பு மே மாதமே வெளியான போதும், இதுவரை படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை. இந்த நிலையில் தற்போது ஆகஸ்ட் 3ம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. மூன்றே மாதங்களில் விடாமுயற்சி படத்தின் மொத்த படப்பிடிப்பை முடித்துவிட்டு, அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் திரைக்கு கொண்டு வரவும் திட்டமிட்டுள்ளார்கள். அதனால் ஆகஸ்ட் மாதம் இப்படத்தில் நடிக்கத் தொடங்கும் அஜித், மூன்றே மாதங்களில் நடித்து முடித்துவிட்டு நவம்பர் மாதம் முதல் இரண்டாம் கட்ட உலக பைக் சுற்றுலாவை தொடங்குவதற்கும் திட்டமிட்டுள்ளாராம்.