மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
நடிகை ராஷ்மிகா மந்தனாவை போலவே அவருக்கு அடுத்ததாக குறுகிய காலத்தில் மிகப்பெரிய அளவில் புகழ்பெற்ற நடிகை என்றால் அது கிர்த்தி ஷெட்டி தான். தற்போது தெலுங்கு மற்றும் தமிழில் இளம் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வரும் இவர் மலையாளத்திலும் அடியெடுத்து வைத்து வரலாற்று படம் ஒன்றில் நடித்து வருகிறார். 2 மாதங்களுக்கு முன்பு வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான கஸ்டடி படத்தில் நடித்திருந்தார் கிர்த்தி ஷெட்டி.
இந்த நிலையில் சில தினங்களாக கிர்த்தி ஷெட்டியை பிரபல வாரிசு நடிகர் ஒருவர் தனது கட்டுப்பாட்டிற்குள் வைக்க முயற்சிப்பதாகவும் தான் செல்லும் இடங்களுக்கு எல்லாம் தன்னுடன் கம்பெனி கொடுக்க வேண்டும் என துன்புறுத்துவதாகவும் செய்திகள் வெளியாகின. தற்போது கிர்த்தி ஷெட்டியே இந்த செய்திகள் அனைத்தும் ஆதாரமற்றவை என்று தனது சோசியல் மீடியா பக்கம் மூலமாக விளக்கம் அளித்துள்ளார்.
“கடந்த சில நாட்களுக்கு முன்பு இப்படி ஒரு செய்தி வெளியானபோதே பார்த்தேன்.. தானாகவே அது அமுங்கி போய்விடும் என்று நினைத்தால் அது பெரிய அளவில் பரவ ஆரம்பித்தது. இதற்கு இத்தோடு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று தான் இந்த பதிவை இட்டுள்ளேன். அதில் சொல்லப்பட்ட செய்திகள் எதுவுமே உண்மை இல்லை.. எல்லாமே இட்டுக்கட்டப்பட்ட கட்டுக் கதைகள்” என்று கூறியுள்ளார் கிர்த்தி ஷெட்டி.