9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? | சர்வர் வேலை சாதாரணமானது இல்லை : இயக்குனர் கே.பாக்யராஜ் சொன்ன கதை | நயன்தாரா பிறந்தநாளுக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசளித்த விக்னேஷ் சிவன் | பிளாஷ்பேக்: நட்பின் ஆழம் பேசிய “எங்கள் தங்கம்” படப் பாடல்கள் | இப்போதே புரமோஷனை ஆரம்பித்த 'வாரணாசி' படக்குழு | 'எல்ஐகே' : விக்னேஷ் சிவன் எடுத்த அதிரடி முடிவு | இழந்த வெற்றியை 'மாஸ்க்'கில் மீட்பாரா கவின் ? | தெலுங்கு ரீ என்ட்ரிக்காக காத்திருக்கும் பிந்து மாதவி | தமிழுக்கு வரும் துளு நடிகை |

நடிகர் மோகன்லால் சில நாட்களுக்கு முன்பு, தான் நடித்து வந்த மலைக்கோட்டை வாலிபன் என்கிற படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்தார். இதைத்தொடர்ந்து சமீபத்தில் பாலிவுட் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் தயாரிப்பில் புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தற்போது படப்பிடிப்பு இல்லாததால் தனது குடும்பத்துடன் சிங்கப்பூருக்கு சுற்றுலா கிளம்பி சென்றுள்ளார்.
இந்த நிலையில் நடிகை ராதிகாவும் சிங்கப்பூரில் தனது குடும்பத்துடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கே மோகன்லால் தம்பதியை நேரில் சந்தித்த ராதிகா அந்த மகிழ்ச்சியுடன் தான் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். எண்பதுகளில் மோகன்லாலுடன் இணைந்து மலையாளத்தில் நடித்த ராதிகா அதன்பிறகு சில வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் வெளியான இட்டிமானி மேட் இன் சைனா என்கிற படத்தில் மீண்டும் மோகன்லால் உடன் இணைந்து நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.