நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
நடிகர் விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ படத்தில் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து அவரது 68வது படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குகிறார். இந்த படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தனது 25வது படமாக தயாரிக்கின்றனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் என்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தனர்.
விரைவில் லியோ படத்தின் படப்பிடிப்பை விஜய் நிறைவு செய்யும் நிலையில் அடுத்து விஜய்யின் 68வது படத்தின் படப்பிடிப்பு வருகின்ற அக்டோபர் மாதத்திற்குள் துவங்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தை அடுத்த வருட தீபாவளிக்கு வெளியிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிகில் படத்திற்கு பிறகு சில வருடங்கள் கழித்து விஜய் படம் தீபாவளிக்கு வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.