மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
ஆந்திராவை சேர்ந்த ராதா 2002ம் ஆண்டு 'சுந்தரா டிராவல்ஸ்' படத்தின் மூலம் அறிமுகமானர். அதன்பிறகு கேம், அடாவடி படங்களில் நடித்தார். 2008ம் ஆண்டு வெளிவந்த காத்தவராயன் தான் அவர் நடித்த கடைசி படம். அதன்பிறகு பைரவி என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்தார்.
அதிக படங்களில் நடிக்கவில்லை என்றாலும் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாதவர். தொழில் அதிபர் பைசல் 6 வருடம் தன்னோடு வாழ்ந்து விட்டு திருமணம் செய்ய மறுப்பதாக புகார் அளித்தார். தற்போது பாரதி கண்ணமா 2 சீரியலில் நடித்து வருகிறார்.
இப்படி அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வந்த ராதா 15 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்கிறார். இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படத்தை டிரண்டிங் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் வொயிட் ஹோர்ஸ் நிறுவனங்கள் தயாரிக்கிறது. விதார்த், கலையரசன், திரிகுண், சந்தோஷ் பிரதாப், ஜான்விஜய், தேஜு அஸ்வினி, அதுல்யா சந்திரா, ஸ்வேதா டோரத்தி, உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இயக்குநர்கள் பி.வாசு, தங்கர் பச்சான் ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய சகோ கணேசன் இயக்குகிறார். உதயகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். சூப்பர் சிங்கர் புகழ் அஜீஸ் இசையமைக்கிறார். மர்டர் மிஸ்டரி கலந்த க்ரைம் திரில்லராக உருவாகிறது.